வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

புலம்பெயர் தமிழர்களின் நிவாரணம் குறித்து பிரதியமைச்சர் முரளிதரன் குற்றச்சாட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அரசாங்கத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமானால் உரிய முறையில் மக்களை சென்றடையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக எமது செய்திப்பிரிவினருக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது 20ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வடக்கு உட்பட சத்துருகொண்டான், தன்னாமுனை, ஊரணி, வந்தாறுமூலை, சம்மாந்துறை, மாவடி வேம்பு, சித்தாண்டி, கிராண், பாலாச்சோலை, தளவாய் போன்ற பிரதேசங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்கு உலர் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுளளன. வெள்ள நிவாரனத்திற்கான நிதியினை ஒதுக்கித்தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அரச அதிகாரிகளுடன் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வெள்ள நிவாரணப் பணியை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடு வருகின்றன.
எமது அமைச்சில் இருந்து 10ஆயிரம் பேருக்கு சமைத்த உணவு வழங்கியுள்ளோம். வாகரை, கிராண் பிரதேச செயலகங்களில் உள்ள மக்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டுள்ளன. புத்தூர், சேற்றுக்குடா பகுதியில் 600 குடும்பங்களுக்கு அரச கூட்டுறவு சங்கத்தின் மூலமாக உலர் உணவு வழங்கவுள்ளோம்.
அதேநேரம், வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு அனர்த்த நிவாரண அமைச்சினூடாக நிவாரண நிதி வழங்க உள்ளோம். பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் உள்ளவர்களுக்கு 10ஆயிரம் ரூபாவும், அதைவிட குறைந்த பகுதியளவு ஏற்பட்ட சேதங்களுக்கு குறைந்த தொகையும் வழங்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’