தமிழகத்தின் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து திமுக தமிழக அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.
சென்னை மைலாப்பூரில் இருந்து முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி தலைமையில் பேரணியாக புறப்பட்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோது கனிமொழி எம்பி கைது செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் கனிமொழி தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதும் கைது செய்யப்படுவதும் நிறுத்தப்படவேண்டும் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் அத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன எனவேயே இந்தப் போராட்டம் என்றார் அவர்.
பல எதிர்க்கட்சித் தலைவர்களும் மீனவர் சிறைபிடிப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இதனிடையே புதுடில்லியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிரதம்ர் மன்மோகன் சிங், 118 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன, நாங்கள் மிக கவலைப்படுகிறோம், இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, சம்பவம் குறித்து இலங்கையுடன் பேசி அவர்களை விடுவிக்க ஆவன செய்யப்படும் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’