இ
லங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சுற்றிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 112 இந்திய மீனவர்களையும் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.இது தொடர்பாக வடபிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்திய மீனவர்கள் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்படவில்லை என தெரிவித்தார்.
இந்த மீனவர்களின் 18 இழுவைப் படகுகளையும் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த விடயம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவித்து மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவரது ஆலோசனையைப் பெறுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றது.
பொலிசாரின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணை தூதரகத்தின் முதன்மை அதிகாரி மகாலிங்கம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியதுடன், உள்ளுர் மீனவர்களையும் சந்தித்துள்ளார். நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுவதற்கு முன்னர் இந்திய மீனவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’