இலங்கையின் பிரபல பாதணி உற்பத்தி நிறுவனமான லக்பா நிறுவனமானது வடமராட்சி வதிரியிலுள்ள தோற்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் அபிவிருத்தியில் பங்கெடுக்கின்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
கடந்த மாதம் விசேட அழைப்பின் பேரில் லக்பா உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி நிறுவனத்தினர் தமது உற்பத்தி வளங்களையும் நுட்பங்களையும் வதிரி தோற்பொருள் உற்பத்தி மையத்திற்கும் வழங்கி வைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட லக்பா முகாமைத்துவ பணிப்பாளர் சந்திரா கன்னங்கர மற்றும் ஊழியர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்ததுடன் இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அவரது பணிமனையில் சந்தித்து கலந்துரையாடினர். இதனைத்தொடர்ந்து அனைவரும் வதிரி தோற்பொருள் உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட உற்பத்தி இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட்டதுடன் துரிதமாகவும் இலகுவாகவும் பாதணிகள் உற்பத்தி செய்யும் செயன்முறை அங்கு செய்முறை மூலம் காண்பிக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினூடாக சுமார் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வதிரி தோற்பொருள் உற்பத்தி நிலையமானது தற்போதைய புதிய உற்பத்தி உத்திகள் மற்றும் இயந்திர சாதனங்கள் மூலம் தமது உற்பத்திகளை பெருக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.
தமது வேண்டுகோளை ஏற்று யாழ்ப்பாணம் வருகை தந்து தோற்பொருள் உற்பத்தி மேம்பாட்டில் பங்கெடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் லக்பா நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு வதிரி மக்கள் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இன்றைய நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளர் சத்தியசீலன் வடமராட்சி ஈ.பி.டி.பி அமைப்பாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன் வதிரி தோற்பொருள் உற்பத்தி நிறுவன தலைவர் லக்ஷ்மிகாந்தன் ஆகியோர் உள்ளிட்ட வதிரி தோற்பொருள் ஊழியர்களும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து வதிரி தோற்பொருள் உற்பத்தி வளாகத்தில் இயங்கும் வதிரி தமிழ் மன்ற முன்பள்ளிக்கும் விஜயம் செய்த அமைச்சரவர்கள் அங்கு முன்பள்ளிக் குழந்தைகளுடன் அளவளாவியதுடன் அக்குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளையும் தானே வழங்கிவைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’