வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தொண்டர் சேவை பணியாளர்கள் அமைச்சருடன் கலந்துரையாடல்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.மாவட்ட பிரதேச செயலர் பிரிவுகளில் தொண்டர் சேவையில் கடமைபுரியும் ஊழியர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்
.
அமைச்சரின் யாழ்.செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தொண்டர் சேவை அடிப்படையிலான தமது கடமை நிறுத்தப்படுவதாக அரச அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து அமைச்சர் அவர்களிடம் எடுத்து விளக்கினர்.

இவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சரியான வாய்ப்புகள் வரும் வரையில் கடமைபுரிந்து செயலகங்களில் தொண்டர் அடிப்படையில் பணிபுரியுமாறும் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துறைசார்ந்த துறைகளில் அனுபவ பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மாவட்ட அரச அதிபருடன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதுடன் அதன் சாதக பாதக நிலைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகவும் அதுவரையில் உங்களுக்கான என்னாலான பங்களிப்புகள் நிச்சயம் கிடைக்குமெனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் பணிபுரிந்த மேற்படி தொண்டர்களுக்கு முதல் ஆறுமாதம் ஐ.ஓ.எம் நிறுவனமும் அதன் பின்னர் மகேஸ்வரி நிதியமும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’