வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 ஜனவரி, 2011

'குழந்தையை கொன்ற இலங்கை பணிப் பெண்ணுக்கு உதவி வழங்கப்படும்'

னது குழந்தையை நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படும் பஹ்ரேனிலுள்ள வீட்டு பணிப்பெண்ணுக்கு உதவி வழங்கவும் இந்த பிரச்சினையை ஆராயவும் குவைத்திலுள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் தேவையேற்படின் பஹ்ரெய்ன் செல்வாரென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவி பொது முகாமையாளர் எல்.கே.றுகுணுகே தெரிவித்தார்.

தற்போது பொலிஸ் காவலிலுள்ள குறித்த பணிப்பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகின்றது என றுகுணுகே கூறினார்.
இலங்கையின் பிரதிநிதியாக உள்ள கொன்ஸல் ஜெனரல் பி.பி.ஹிக்கொட தொடர்புடைய பொலிஸாருடன் பேசியுள்ளார். இவர் பணிப்பெண்ணின் எஜமானையும் சந்திக்கவுள்ளார் என கூறினார்.
இப்பெண் வேலை செய்த வீட்டினுல் ஒரு பையில் இறந்த சிசு காணப்பட்டது. குறித்த சம்பவம் சனிக்கிழமை அறியப்பட்டதாக றுகுணுகே மேலும் தெரிவித்தார்.
39 வயதான குறித்த பெண் தான் குழந்தையை நெரித்துக் கொன்றதை, தன் எஜமானிடம் ஒப்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’