வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 ஜனவரி, 2011

பயங்கரவாதத்தை வென்ற அனுபவம்;முதல் கருத்தரங்கு மே மாதம் கொழும்பில்

யங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழிப்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட அனுபவம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு கொழும்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

சுமார் 54 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், வாண்மையாளர்கள், புலமையாளர்கள், கலந்துகொள்ளவுள்ள இந்த கருத்தரங்கில் புது டில்லியிலிருந்து சுமார் 30 பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
இராணுவ தலைமையகத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
21ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளதுடன் உலக நாடுகள் மத்தியில் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது. அந்தவகையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த பெருமை இலங்கைப் படையினரை சார்ந்துள்ளது.
இந்நிலையில் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டுள்ள நாடுகள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட நாடொன்றின் அனுபவம் மிகவும் பயனுடையதாக இருக்கும். இதனால் இலங்கை தனது அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது.
இதற்காக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டுள்ள நாடுகள் மற்றும் இலங்கை இராணுவத்துடன் தொடர்புகளைப் பேணிவரும் நாடுகள் என தெரிவுசெய்யப்பட்ட சுமார் 54 நாடுகள் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளன.
இந்நாடுகளுக்கான அழைப்பிதழ்கள் பாதுகாப்பு செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
வன்னி மற்றும் கிழக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள், கண்ணிவெடிகளை அகற்றுதல், இணக்கப்பாட்டுடனான நடவடிக்கைகள், நாட்டைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படவுள்ளன.
அத்துடன், இலங்கையில் அணுகுமுறை வழமையான அணுகுமுறைகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டது மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதில் இலங்கை எவ்வாறு வெற்றி பெற்றது என்பன தொடர்பிலும் இந்த கருத்தரங்கின் போது ஆய்வு செய்யப்படவுள்ளன.
இதேவேளை, வினைத்திறன் மிக்க பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயம், செயற்பாடு, தந்திரோபாயம் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் விசேட தேவை குறித்த பயிற்சிகள், பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் செயன்முறையில் மனித உரிமையாளர்களின் பாத்திரங்கள், அரசியல் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளன.
இந்த கருத்தரங்குடன் தொடர்புபட்ட கண்காட்சியொன்றையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கருத்தரங்கில் இடம்பெறும் விடங்களை சர்வதேச நாடுகள் நேரடியாக அறிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் கருத்தரங்கினை இணையத்தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’