வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 ஜனவரி, 2011

மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டையும் வழங்க வைத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர்

தொ
ண்டர் ஆசிரியர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட வடமராட்சி கிழக்கு பாடசாலை சமூகத்தினரை நேற்றையதினம் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதேச பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அன்பளிப்புச் செய்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் செல்வராஜா தலைமையில் ஆழியவளை அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச கல்விச் சமூகத்தினர் பலரும் பங்குகொண்டனர். இங்கு தலைமையுரையாற்றிய கல்விப்பணிப்பாளர் செல்வராஜா வடமராட்சி கிழக்கு பிரதேச கல்வி வரலாற்றை விளக்கமாக எடுத்துரைத்தார். குறிப்பாக 90ம்ஆண்டிற்கு முன்னர் சுமார் ஐயாயிரம் மாணவர்களும் 225 ஆசிரியர்களுமாக விளங்கிய இப்பிரதேச பாடசாலைகளில் தற்சமயம் ஏழு பாடசாலைகள் மட்டுமே ஆயிரத்து இருநூறு மாணவர்களுடன் இயங்குவதாக தெரிவித்தார். அதிலும் தென்மராட்சி இராமாவில் நலன்புரி முகாமிலும் இப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் தகவல் வெளிட்டார். மேலும் கடந்த காலத்தில் கல்வி நடவடிக்கைகளிலும் விளையாட்டுத் துறையிலும் வடமராட்சி கிழக்கு பிரதேச மாணவர்கள் ஈட்டிய சாதனைகளையும் அவர் அங்கு விபரமாக தெரியப்படுத்தினார்.

தனது உரையின் இறுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பின்தங்கிய இப்பிரதேச கல்வி வளர்ச்சியை கருத்திற்கொண்டு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் உதவிகளையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த கல்விப் பணிப்பாளர் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்கும் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியதையும் கூடியிருந்தோரின் கரகோசத்தின் மத்தியில் தெரியப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இயற்கை மற்றும் மனித அழிவுகளினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் கல்வி மேம்பாடு மிக முக்கியமானது எனத் தெரிவித்ததுடன் அதற்கு தன்னாலான சகல உதவிகளையும் வழங்குவேன் என உறுதியளித்தார். மேலும் கல்விச் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக குறிப்பிட்டதுடன் தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் தெரியப்படுத்தியிருக்கும் கோரிக்கைகள் உட்பட இக்கல்வி வலயத்திற்குட்பட்ட சகல தேவைகளையும் ஆராய்ந்து தீர்வுகாணும் முகமாக எதிர்வரும் 24 ம் திகதி தமது பணிமனையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அறியத்தந்தார்.

இந் நிகழ்வின் போது தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மூலம் இப்பிரதேசத்தின் ஏழு பாடசாலைகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சரவர்கள் கையளித்தார். மாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை உடுத்துறை மகாவித்தியாலயம் ஆழியவளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கே அமைச்சரினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் நேரடியாகவே விளையாட்டுப் பொருட்களை அமைச்சரவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இதனைவிட இராமாவில் நலன்புரி நிலையத்தில் இயங்கும் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்திற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழஙக்கப்படும் என அமைச்சரவர்கள் அறிவித்ததுடன் ஏனைய பாடசாலைகள் வலயக்கல்வி பணிமனையில் விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்தார்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’