வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 ஜனவரி, 2011

பாகிஸ்தானில் பயங்கரம்-பஞ்சாப் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் சயீர், மாலிக் மும்தாஜ் ஹூசேன் காத்ரி என்ற தனது மெய்க்காப்பாளரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்
.
பெனாசிர் பூட்டோ 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் நடந்துள்ள மிகப் பரபரப்பான அரசியல்படுகொலையாக இது வர்ணிக்கப்படுகிறது.
46 வயதேயாகும் சல்மான், பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அதிபர் சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பி்ல கூறுகையில், இஸ்லாமாபாத்தின் முக்கிய வணிகப் பகுதியான கோசர் மார்க்கெட்டை சல்மான் வந்தடைந்தவுடன் அவரது மெய்க்காவல் படையில் இருந்த ஒருவர் சரமாரியாக சுட்டுத் தள்ளி விட்டார். அதில், சம்பவ இடத்திலேயே ஆளுநர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’