பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி இன்று ஒரு பள்ளி ஆசிரியையால் குத்தி கொல்லப்பட்டார். அந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை கற்பழித்தாக புகார் அளித்திருந்தார்.
பூர்னியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவர் கேசரி மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கேசரியும், அவரது அடியாட்களும் கடந்த மூன்று வருடமாக கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்ததாக கூறியிருந்தார். இருப்பினும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை சிபாஹி தோலாவில் உள்ள எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்றார் பூனம். அங்கு தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் கேசரி. அவரிடம் சென்ற பூனம், கேசரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கத்தியை எடுத்து சரமாரியாக கேசரியைக் குத்தினார். இதில் நிலை குலைந்த கேசரி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பீகாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்ட கேசரிக்கு 51 வயதாகிறது. நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
கேசரியை சரமாரியாக குத்திக் கொன்ற பூனை அங்கிருந்தவர்ள் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்ததில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் நிதீஷ் குமார் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். டிஜிபியிடம் விரிவான அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பையும் மறு ஆய்வு செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து கேசரியின் ஆதரவாளர்கள் வன்முறையில் குதிக்காமல் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’