வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 ஜனவரி, 2011

பிரதம நீதியரசர் பதவியை இராஜினாமா செய்துவிட்டாரா?: ரணில் கேள்வி

பிரதம நீதியரசர் தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டதாகவும் அதற்கான கடிதத்தை கையளித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

அது உண்மையா என்பதை முதல்வர் சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ரணில் விக்ரமசிங்க, பிரதம நீதியரசர் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டதாகவும் அதற்கான கடிதத்தைக் கையளித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டத்துறையில் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளமையினால் தகவல்களை உறுதிப்படுத்துவதற்காகவே இதனை கேட்கின்றேன். அவர் இராணுவ நீதிமன்றம், நீதிமன்றம் இல்லை என்றும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, ஐ.தே.க விற்கு பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு தொனிப்பொருள் இல்லை என்பதனால் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு எதிரான குண்டொன்றை கையில் எடுத்து வந்தார். அக்குண்டு அவரது கையிலேயே வெடித்துவிட்டது என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவருக்கு கிடைத்த தகவலை உறுதிப்படுத்தி கொள்வதற்கே விரும்பினார் என்று சுட்டிக் காட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’