அரச ஊழியர்கள் அரசாங்கத்தின் கொள்கையைக் கடைப் பிடித்து தங்களது பணிகளை ஆற்றும் அதேவேளை தங்களது அனுபவங்களையும் கொண்டு தங்களது பணிகளை சமூக நோக்குடனும் மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இன்றைய தினம் (03) புது வருட தின வைபவத்தில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மஹிந்த சிந்தனை என்பது ஒரு வட்டத்திற்குள் முடங்கக்கூடிய செயல் திட்டம் அல்ல. அது பரந்து வியாபிக்கக்கூடியதான செயற்திட்டங்களை நடைமுறைச் சாத்தியமாக்கக்கூடியது. இதனை ஏற்று பொது மக்களுடன் தாராள இரக்கத் தன்மையுடன் அனுகுதலின் ஊடாக நாம் சிறந்த சேவையை அம் மக்களுக்கு வழங்க முடியும்.
மனித நேயமிக்கதாக பணிகளும் நடத்தையும் செயற்பாடுகளும் அமைந்தால் அதனை நான் பெரிதும் வரவேற்பேன். எனது மதக் கோட்பாடும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய இந் நிகழ்வில் அமைச்சு அதிகாரிகளும் உத்தியோகஸ்தர்களும் அரச பணி தொடர்பில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மேலதிக செயலாளர்களான சமரசிங்க திருமதி. மங்கலிக்கா அதிகாரி ஆலோசகர் ஜெகராசசிங்கம் திணைக்களங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் பணிப்பாளாகள் அமைச்சர் அவர்களது பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரணி சந்திரலால் ராஜ்குமார் மக்கள் தொடர்பு அதிகாரி ரீ.எம். பாருக் அசீஸ் பிரத்தியேக துணையாளர் தயாழினி மற்றும் ஏனைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’