ஊடகவியலாளர்கள் தமக்கு எல்லாம் தெரியுமென்று ஒருபோதும் நினைக்கக் கூடாதென ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக பயிற்சி பட்டறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஊடகவியலாளர்கள் அவ்வாறு நினைத்தால் முன்னோக்கி செல்ல முடியாதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் எப்போதும் தமது அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
சர்வதேச ஊடகங்களுடன் ஒப்பிடும்போது எமது ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் முன்னிலையில் உள்ளனரெனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை இன்று சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பி.கனேகல மற்றும் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்ன எதுகல ஆகியோர் கலந்துகொண்டனர்.
பயிற்சி பாசறையில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான விக்டர் ஜவன், எம்.எஸ்.எம்.ஐயூப், காமினி சுமனசேகர மற்றும் பேராசிரியர் புஞ்சிநிலமே மீகஸ்வத்த ஆகியோர் விரிவுரை நடத்தினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’