ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறைப் பிரதேச சபை வேட்பாளரும் கட்சியின் வடமராட்சி கிழக்கு பிரதேச அமைப்பாளருமான இரத்தினசிங்கம் சதீஸ் (தோழர் சதீஸ்) இன்று காலை அகால மரணமடைந்தார்.
சிற வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற சம்பவமொன்றிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக விஜயம் மேற்கொண்டு சடலத்தைப் பாhவையிட்டதுடன் சம்பவம் தொடாபாக பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.
பிரதான வீதி பருத்தித்துறையை வசிப்பிடமாகக் கொண்ட தோழர் சதீஸ் இறக்கும் போது அவருடைய வயது 30.
சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக் கல்வியை வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் பயின்ற தோழா சதீஸ் அவர்கள் மேற்படிப்பை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் தொடாந்ததுடன் ரஷ்ய பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவ பீடத்தில் மூன்று வருடங்கள் கற்றதன் பின்னர் கொழும்பில் இருந்தவாறே இந்திய தமிழ்நாடு விநாயகமிசன் பல்கலைக் கழகத்தில் உயிரியல் பிரிவில் பி. எஸ்சி சிறப்புப் பட்டம் பெற்றிருந்தார்.
இன்றைய சம்பவத்தில் உயிரிழந்த இரத்தினசிங்கம் சதீஸ் (தோழா சதீஸ்) அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி நிற்கின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’