நிரந்தர பிரதி ஐக்கிய நாடுகள் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரமிங்காம் என்னும் இடத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த கூட்டத்தில் தன்;மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சவேந்திர சில்வா தேவாலயத்திற்கு செல்லும்போது, சிலர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சவேந்திர சில்வா கூட்டத்தில் உரையாற்றியபோது, யுத்தத்தின் இறுதி நாட்களில் அப்பாவி தமிழ் மக்களை இராணுவம் கொன்றதாக கூறப்படுவதையிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
புலிகள் தான் தமது பாதுகாப்புக்காக அப்பாவி தமிழ் மக்களை கவசமாக பயன்படுத்தினரெனவும் அவர் கூறினார்.
அரசாங்கம், அப்பாவித் தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றியது. தமிழர்கள் தான் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர முயன்ற தமிழர்களை சுட்டார்களெனவும் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சபையிலிருந்த சுந்தரலிங்கம் என்பவர் வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களை சுடுமாறு கட்டளை இட்டதாக சவேந்திர சில்வா மீது நேரடியாக குற்றஞ்சாட்டினார்.
இந்த கேள்வியை கேட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களை போன்ற துணிந்த இலங்கையர்கள் இருப்பது பற்றி நான் பெருமையடைகிறேனெவும் அவர் கூறினார்.
சில இராணுவ அதிகாரிகள், அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ளனர். எனினும், மொத்தமாக பார்க்கையில் இராணுவம் புலிகளிடம் அகப்பட்டிருந்த தமிழ் மக்களை மீட்பதில் நல்லமுறையில் செயற்பட்டதாக அவர் கூறினார்.
மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டிருப்பின் அது ஒரு நாள் வெளிவரும்.
2009இல் புலிகளின் தற்கொலை தாக்குதலிருந்து தான் தப்பியது தனது குற்றமற்ற தன்மையின் ஒரு வெளிப்பாடெனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’