வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 31 ஜனவரி, 2011

சந்திரிகா சாட்சியமளித்தால் ஏற்க தயார்: நல்லிணக்க ஆணைக்குழு

ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் காலக்கெடு முடிவடைந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சாட்சியமளிக்க முன் வரும் பட்சத்தில் விசேட ஏற்பாடாக அவருக்கு சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளோம் என ஆணைக்குழுவின் ஊடக இணைப்பாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஏதிர்வரும் வாரங்களில் சந்திரிக்கா குமாரதுங்க வெளிநாட்டில் இருப்பார் என்பதால் அவர் சாட்சியமளிக்க தீர்மானிக்கும் பட்சத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் செல்லும் என அவர் கூறினார்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’