இலங்கை மீனவர்கள் இருவர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை மீன்பிடித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய மீன்பிடித் திணைக்களத்தின் துணை இயக்குனரான லால் டி சில்வா அவர்கள், கொல்லப்பட்ட மீனவர்களின் படகு கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அதில் இருந்த மேலும் மூன்று மீனவர்கள் பணயக் கைதிகளாக அவர்களால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
'தர்ஷன 6' என்னும் படகே கடத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் நான்காம் திகதி மிரிசு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தொழிலுக்காக இந்த மீன்பிடிப் படகு புறப்பட்டுச் சென்றதாகவும், ஜனவரி 27 ஆம் திகதி அது சர்வதேச கடற்பரப்பில் சோமாலிய கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
கொல்லப்பட்ட இரு மீனவர்களின் சடலங்களும் கடற்கொள்ளையர்களால் கடலில் வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளுக்காக தாம் இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’