வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 31 ஜனவரி, 2011

மேசன் தொழில் பயிற்சியை நிறைவு செய்த முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்

வுனியா புனர்வாழ்வு நிலையத்தில் மேசன் தொழில் டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த முன்னாள் போராளிகள் 503 பேருக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது
.இந்நிகழ்வில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, றிசாட் பதியுதீன், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எஸ்.ரணசிங்க, மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் கடந்த ஒரு வருடகாலத்திற்கு மேலாக புனர்வாழ்வு பெற்றவர்களில் ஒரு தொகுதியினர் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளை விடுவிக்கும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு பெற்ற சுமார் எட்டாயிரம் பேர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் நாலாயிரம் பேர் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’