அந்தச் சிறுமியின் தந்தைக்கு தனது மகளை, அந்த நபருக்கு திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் எதுவும் இல்லை என்றும், அச்சுறுத்தல் மற்றும் பலவந்தம் ஆகியவை இந்தத் திருமணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இஸ்லாமிய நீதிமன்றத்தின் நீதிபதி கண்டறிந்துள்ளார்.
மலேசியாவில் 16 வயதுக்கு உட்பட்ட முஸ்லிம் பெண்கள், இஸ்லாமிய நீதிமன்றத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள முடியும்.
இந்த 11 வயதுச் சிறுமியை, அந்த 41 வயதுக்காரர் கடந்த பெப்ரவரி மாதத்தில் தனது நான்காவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என்று இஸ்லாமிய நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என்பது காரணமல்ல. அவர்கள் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.
16 வயதுக்கு உட்பட்ட இஸ்லாமியப் பெண்கள் இஸ்லாமிய நீதிமன்றத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு சிறார் திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று பெண் உரிமை அமைப்புக்கள் குரலெழுப்புவதற்கு இந்தத் திருமணம் தூண்டியயுள்ளது.
மலேசிய சிறார் திருமணம் |
இந்த மாத முற்பகுதியில், பொது வைபவம் ஒன்றில் வைத்து 14 வயதுப் சிறுமி ஒருத்திக்கு 23 வயது ஆசிரியரை திருமணம் செய்து வைத்தார்கள்.
திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 18 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பெண்ணுரிமை அமைப்புக்கள் கோருகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’