வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 டிசம்பர், 2010

தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து அசல ஜாகொட எம்.பி. வெளியேற்றம்

மைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொட வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் விரிசல்கள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.

2008 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணியை ஜே.என்.எவ்.) ஆரம்பித்த எம்.பிகளில் அசல ஜாகொடவும் ஒருவர். கடந்தபொதுத் தேர்தலின்பின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.
அசல ஜாகொடவின் வெளியேற்றப்பட்டத்தை தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரியன்ஜித் விதாரண உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். எனினும் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படும் எவருக்கும் எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கத் தயங்காது என அவர் கூறினார்.
'ஓர் அணியாக இணைந்து தேசிய இலக்குகளை அடைவதற்கே நாம் ஜே.வி.பியிலிருந்து பிரிந்து தேசிய சுதந்திர முன்னணியை ஆதரித்தோம். தமது சொந்த நலன்களுக்காக கட்சியின் கொள்கைகளுடன் சமரசம் செய்துகொள்ள ஓரிவர் விரும்பலாம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நாம் தயங்கப்போவதில்லை' என பிரியன்ஜித் விதாரண கூறினார்.
அதேவேளை, தனக்கும் கட்சியித் தலைமைத்துவதுடன் பிரச்சினைகள் இருப்பதாக விதாரண ஒப்புக்கொண்டார்.
'எனக்கு கட்சி தலைமைத்துவத்துடன் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அது பற்றி இப்போது பேசத் தயாரில்லை. பொருத்தமான வேளையில் நான் அதை செய்வேன்' என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’