வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 டிசம்பர், 2010

மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுபவர்கள் எமது இனத்திற்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேச வேண்டும் - சந்திரகுமார் பா.உ

னித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர்கள் எமது இனத்திற்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும். வெறுமனே ஒரு தரப்பால் மட்டும் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பேசுபவர்கள் உண்மையான மனித உரிமை வாதிகளாகவோ அல்லது ஜனநாயகவாதிகளாகவோ இருக்க முடியாது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். புகைப்படம் இணைப்பு
டிசம்பர் 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று (12) வவுனியா முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மனித உரிமைகள் இல்லத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற எல்லா மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும். அவ்வாறு பேசுவதுதான் இவ்வாறான நாட்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். நேற்று நடந்தவற்றை மட்டும் மனித உரிமை மீறல்களாக பேசிக்கொண்டு அதற்கு முன்னைய காலங்களில் எமது இனத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீளல்களின் வராலற்றைப் பேசாமல் இருப்பது நியாயமற்றது. எனக்கு முதல் பேசிய முஸ்லிம் அன்பர் ஒருவர் கூறினார். தாங்கள் 24 மணிநேரத்திற்குள் தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வை. அதையும் பேசுங்கள். அவையும் அப்பட்டமான மனித உரிமை மீறலே. இதையும் பேசிக்கொண்டு இன்னொரு இனத்தால் எம்மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசுவது நியாயமானது. மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசும் போது இரு பக்கங்களையும் பார்க்க வேண்டும். எல்லா மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய இந் நிகழ்வில் த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் யோகேஸ்வரன் சிறிதரன் மனித உரிமை இல்லத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி கணேசலிங்கம் வவுனியா நகர சபைத் தலைவர் நாதன் மனித உரிமை இல்லத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் மேகலா வவுனியா பிரதேச செயலர் கிராம அலுவலர்கள் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’