சமாதானத்துக்கான சர்வதேச குஸி விருதைப் பெற்றுக்கொண்ட யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மண்டபத்தில் மங்கல விளக்கினை பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்டோர் ஏற்றி வைத்தனர்.
வாழ்த்துரைகளை மேஜர் ஜெனரல் சுனில் தென்னக்கோன் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் மதகுருமார்களும் நிகழ்த்தினர்.
ஏற்புரையினை மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நிகழ்த்தினார்.
நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மஹிந்த ஹத்துருசிங்க அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
இந்து கிறிஸ்தவ பௌத்த மதகுருமார்கள் விமானப்படை கடற்படை தரைப்படை ஆகியவற்றின் உயர்நிலைத் தளபதிகள் துறைசார்ந்த அதிகாரிகள் என பலதரப்பட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அவர்கள் பிலிப்பைன்ஸ் மணிலாவில் கடந்த 24ஆம் திகதி சமாதானத்துக்கான சர்வதேச குஸி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’