வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 டிசம்பர், 2010

அவசரகால விதிகளை தளர்த்துமாறு அமெரிக்கா கோரிக்கை

வசரகால விதிகளைத் தளர்த்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலை செய் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறும் அமெரிக்கா கோரியுள்ளது
.தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேகக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இடம்பெயர்ந்தோர் ஏற்கெனவே விடுதலையாகியுள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டார். எனினும் குற்றம் சுமத்தப்படவுள்ளவர்களின் விபரங்கள் அவர்களின் குடும்பத்தினரின் நிம்மதிக்காக தெரிவிக்கப்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
அவசரகால விதிகளையும் உயர் பாதுகாப்பு வலயங்களையும், குறிப்பாக வடக்கில், கத்தரிப்பது அவசியம் எனவும் அவர் கூறினார்.
புதிய உள்ளுர் தலைவர்கள் உருவாகுவதற்கேற்ப வழக்கில் தேர்தல்களை நடத்துமாறும் அவர் கூறினார். மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையின் வடபகுதியில் அரசியில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியளிப்பதற்காக அங்கு செல்ல அனுமதிப்பதன் அவசியத்தையும் ரொபர்ட் பிளேக் வலியுறுத்தினார்.
அதேவேளை, ஏதேனும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆராய்வதற்கான ஓர் பொறிமுறையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அமெரிக்காவின் ஆதரவையும் அவர் மீள உறுதிப்படுத்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’