மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையின் களுவாஞ்சிக்குடி நாகதம்பிரான் கோயிலுக்கு அருகில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் புலியொன்று உயிரிழந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவர் புலியின் மீது மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
உயிரிழந்த புலியை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் எடுத்துச்சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் படுவான்கரைப் பகுதியிலிருந்து இந்தப் புலி வந்திருக்கக் கூடும் எனவும் அப்பகுதி மக்கள் இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’