ஹொறண லக்பா பாதணி உற்பத்தி நிறுவனப்பணிப்பாளர் சந்திரகன்னங்கர பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பிலுள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
ஹொறணவில் அமையப்பெற்றுள்ள தமது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இறப்பரிலான பாதணிகளையும் அவர் இதன்போது அமைச்சர் அவர்களிடம் காண்பித்தார்.
இதனடிப்படையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்குக் கீழான கரவெட்டி வதிரிப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இறப்பரிலான பாதணி உற்பத்தி நிறுவனத்துக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பாக ஆரம்பத்தில் சிறு அளவிலான முயற்சியுடன் தமது பங்களிப்பை வழங்கவுள்ள அதேவேளை அது வெற்றியளிக்கும் பட்சத்தில் பாரியளவிலான முயற்சியை மேற்கொள்ள தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கரவெட்டி வதிரிப்பகுதியிலுள்ள இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’