வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 18 டிசம்பர், 2010

முஸ்லிகள் யாழ் திரும்பினர்

லங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களில் அறுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார்.
இவர்களில் சிலர் தமது சொந்த இடங்களிலும் பலர் பொது இடங்களிலும் தங்கியுள்ளார்கள்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ் நகரப்பகுதியிலும் சிறிய எண்ணிக்கையானோர் சாவகச்சேரி பகுதியிலும் தங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போரினால் இடம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களைப் போலவே, இந்த முஸ்லிம் குடும்பங்களுக்கும் மீள்குடியேற்ற உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார்.
இந்த முஸ்லிம் குடும்பங்களைப் பொருத்தவரையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிச் சென்ற குடும்பங்களோடு, உப குடும்பங்களாகப் புதிய குடும்பங்களும் இருப்பதாகவும், இவர்களுக்கு குடியிருப்பதற்கான இடவசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும், இவர்களுக்கு நாட்டின் வேறிடங்களில் காணிகள் வீடுகள் இல்லாத பட்சத்தில் அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’