ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் நோக்கிலேயே நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, எதற்காக இலங்கைக்கு விஜயம் செய்கின்றது என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் ஐ.நா நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளியான தகவல்களை மறுத்துள்ள அமைச்சர், ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் நோக்கிலேயே இந்த விஜயம் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’