வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 10 டிசம்பர், 2010

கல்முனையில் தூக்கிடப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

ல்முனையில் அமைந்துள்ள இலங்கை மின்சாரசபையின் கட்டடத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த பிரேமதாச (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை மின்சாரசபையின் கல்முனைப் பிரிவில் கடமையாற்றும் சிரேஷ்ட மின் அத்தியட்சகர் ஆவார். இவருக்கு 27 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் 24 வயதில் பெண் பிள்ளையொருவரும் உள்ளனர்.
பாண்டிருப்பு பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள கட்டிடமொன்றிலிருந்தே, தொங்கிய நிலையில் மேற்படி நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினர் பாண்டிருப்பு பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகிலுள்ள மேற்படி கட்டிடத்தை தமது கல்முனை அலுவலகத்துக்காக வாடகைக்குப் பெற்றுள்ளதாகச் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தக் கட்டிடத்தை இலங்கை மின்சார சபையினர் வாடகைக்குப் பெற்றிருந்த போதும், கல்முனை மின்சார சபைக் காரியாலயம் இந்தக் கட்டிடத்தில் இன்னும் உத்தியோகபூர்வமாக இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சடலம் தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’