அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணத்தின் போது ஏற்பட்ட சம்பவங்கள் யாவும் இலங்கை அரசாங்கத்திற்கான முன் எச்சரிக்கையாக அவதானிக்கப்படவேண்டியனவாகும்.
மேற்குலகிலும் மேற்கத்திதைய ஊடகங்களை அணுகும் வாய்ப்புக்கொண்ட ஏனைய உலக நாடுகளிலும் இலங்கையின் நிலைவரங்கள் பொறுத்து எதிர்மறையான ஒரு விளக்கமே சித்திரிக்கப்பட்டுள்ளது.இப்பிரச்சினை பொறுத்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.அல்லது ஹீத்ரோ விமான நிலையம்,ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் ஜனாதிபதி தங்கியிருந்த டோர்செஸ்ரர் ஹோட்டல் ஆகியவற்றில் இடம்பெற்றவை போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படக்கூடிய ஆபத்துண்டு.குறிப்பாக கூறுவதானால் பிரித்தானியாவிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் பெரும் புகழ்மிக்கதான ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் ஜனாதிபதி உரையாற்ற இருந்ததனை தடைசெய்யக் கூடியதாயிருந்தமை உலகின் ஏனைய பகுதிகளில் வாழும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான குழுக்களுக்கு ஊக்கத்தினை அளிப்பதாக இருப்பதனால் அவர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடலாம்.
ஜனாதிபதி ராஜபக்ஷ ஆரம்பத்தில் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்வதாயிருந்தது.ஆனால் அது ஒத்திப்போடப்பட்டு ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்திடம் புதிய திகதி ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.ஜனாதிபதியின் விஜயம் ஒத்திப்போடப்பட்ட போது அது பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள உலகளாவிய வகையிலான அதிகார ஆட்சி எல்லையை கொண்ட சட்டத்தின் கீழ் யுத்தத்தின் போதான குற்றங்களுக்காக அவர் ஐக்கிய இராச்சியத்தில் நுழைவதனை தடைசெய்யலாம் என்னும் தொல்லைபற்றி சிந்திக்கப்பட்டிருக்கலாம்,எவ்வாறாயினும் ஜனாதிபதி ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்றச் செல்லுவதனை தவிர்க்காது திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் ஆரம்ப காலத்தில் செல்ல தீர்மானித்து செயற்பட்டமையிலிருந்து அத்தகைய அச்சங்கள் தவறானவை என அவர் நிரூபித்திருந்ததாகவே அனுமானிக்க முடிகிறது.உலகப்புகழ் வாய்ந்த விவாத ஒன்றியத்தினால்(ஒக்ஸ்போர்ட்) இரண்டாவது தடவையாகவும் தன்னை உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளமையினை தான் தனது நாட்டின் கௌரவத்தினை சிறந்த பேச்சாற்றல் அபிப்பிராயம் மூலமாக உலகிற்கு எடுத்துக் காட்டுவத்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாக கூட அவர் அனுமானித்திருக்கலாம்.
அத்துடன், ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் ஜனாதிபதியாகவும் நாட்டின் தலைவராகவும் இருப்பவர்களுக்கு இறைமையின் நிமித்தம் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சர்வதேச சட்ட தத்துவங்களால் அவருக்கு எதிரான சட்ட ரீதியான சவால்கள் யாவற்றிலிருந்தும் பாதுகாப்பளிக்கப்படலாம் என உறுதி கூறி பயணத்திற்கு ஊக்கப்படுத்தியிருக்கலாம். அவருடைய பயணம் தனிப்பட்ட பயணமாக இருந்திருந்தாலும் கூட மேற்கூறியவை காரணமாக அவருடைய ஐக்கிய இராச்சியத்திற்கான பயணத்தினை சுமுகமாக மேற்கொள்ளத்தேவையான சூழலை அந்நாட்டு அரசாங்கம் உறுதி செய்யாமை குறித்து அந்நாட்டு அரசாங்கத்தின் மீது இலங்கை அரசாங்கம் அதிருப்தி கொள்வதற்கு காரணம் காணப்படுகிறது.பிரித்தானியாவின் சட்டத்தை அமுலாக்கம் செய்யும் நிறுவனங்களால் அந்நாட்டில் சீராட்டி வளர்க்கப்படும் சரியான ஜனநாயக உரிமையினை மற்றும் சுதந்திரமாக கருத்து கூறும் உரிமையினை பாதுகாத்து அந்நாட்டுக்கு விஜயம் செய்யும் இன்னுமோர் நாட்டின் தலைவருக்கு வழங்கமுடியாத அளவுக்கு அவை இயலாதனவாகியதனை நம்புதல் கடினமாகவே உள்ளது. இத்தகைய தருணத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு தேவையான காலத்தில் கூட்டொருமைப்பாட்டினை தரத்தவறிய பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவராலயத்திற்கு வெளியே பெரும் இரைச்சலுடன் கூச்சலிட்டு எதிர்ப்பை காட்டுவதனை விட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே தேவைப்படுகின்றன.
மாண்பு தலைகீழாக மாற்றம் அடைதல்
நோர்வேஜியன் அரசால் ஆதரிக்கப்பட்ட யுத்த நிறுத்தம் 2006 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெல்வதற்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் ஆதரவு பெறப்பட்டது. இலங்கையுடன் தொடர்புற்ற நாடுகளில் இராணுவ ரீதியாக வல்லமை மிக்க நாடுகளான ஐக்கிய அமெரிக்கா,இந்தியா,சீனா,ஈரான்,பாகிஸ்தான் போன்றவை இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளை பாதுகாத்துக்கொள்வதற்கும்,தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் தேவையான ஆயுதங்களையும் இராணுவ புலனாய்வு நுட்பங்களையும் வழங்கின.ஜப்பான் போன்ற ஏனைய நாடுகள் யுத்தத்திற்காக நேரடி உதவிகளை வழங்காத போதிலும் பேரளவிலான பொருளாதார உதவிகளை வழங்கின.அதனால் அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டிய வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையினால் ஏற்படும் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளமுடிந்தது.
முப்பது வருட யுத்தத்தினை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இறுதியில் இலங்கை அரசாங்கம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அதில் வெற்றியினை ஈட்டியதோடு இந்நாடு நம்பிக்கையின் கலவிளக்கமாக உருவாகி உலகிற்கு ஒரு புதிய வாழ்க்கையினை காட்டுவதாக இருந்திருக்கவேண்டும்.
மாறாக இலங்கையினது சர்வதேச மாண்பு முற்றிலும் தலைகீழாக மாறிவருகிறது.சர்வதேச நாடுகளின் மதிப்பீட்டினைப் பொறுத்தமட்டில் இலங்கை 1983 ஆம் ஆண்டை அடுத்த காலப்பகுதியினை ஒத்த ஒரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. சர்வதேச ஊடகங்களால் ஜூலை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் அப்போது இருந்த அரசாங்கத்தின் சில பிரிவினரின் ஆதரவுடன் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலைகள் பற்றிய அபிப்பிராயங்கள் பெருமளவு(இலங்கைக்கு எதிரான) எதிர்மறையான சர்வதேச சூழலையே உருவாக்கியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவும் விளைவாகவுமே பலமான ஆயுதம் தாங்கிய இந்திய தலையீடு ஏற்பட்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது இலங்கை சர்வதேச சமூகத்தில் இருந்து பெருமளவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும் போய்விட்டது.இப்போது இலங்கை பெரும் அதிர்ஷ்டவசமாக பலமான ஆசிய நாடுகளான சீனா,பாகிஸ்தான்,மியன்மார் மற்றும் இந்தியாவும் கூட ஆதரவு வழங்கும் நாடாக மாறியுள்ளது. அதனால் மனிதாபிமான பொருளாதார உதவிகளை வழங்கி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு யுத்தப் பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப அவை முன்வந்துள்ளன.
ஜனாதிபதி தனது பேச்சு மூலமாக நடைமுறை நிலைவரங்கள் தொடர்பாக தெரிவிக்கும் எதிர்கருத்துகளையும் பொதுவான பண்பினதல்லாத எதிர் நடவடிக்கைகளையும் (எதிர்த்தடிப்பு) உற்றுநோக்கும் போது இலங்கை அரசாங்கமானது வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களது மனநிலையினையும் அவர்களது ஒழுங்குபடுத்தும் ஆற்றலையும் தவறாக அறிந்து கொண்டுள்ளதாகவே தோன்றுகின்றது.அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து தலைமைத்துவத்திற்காக இழுபறிபட்டுக்கொண்டிருக்கலாம்.ஆனால் அவர்கள் விரைந்து செயற்பட்டு தொடர்ந்தும் எதிர்ப்பினை தெரிவித்துக்கொண்டிருக்கக்கூடியதான பெரும் எண்ணிக்கையான மக்களை அணிதிரளச் செய்யும் திறனுடனும் கையாள கடினமான சக்தியாகவும் தொடர்ந்தும் இருந்தே வருகின்றனர்.
அதேவேளையில்,பிரித்தானிய அரசாங்கமானது அவர்களுக்கு(தமிழ் மக்களுக்கு) ஆதரவு வழங்குவது பற்றியும் உலகிலேயே மிகப் பழைமை வாய்ந்த பாராளுமன்ற ஜனநாயக அமைப்பொன்றில்(எமது) ஜனாதிபதிக்கு சுதந்திரமான பேச்சு உரிமைக்கான ஆதரவு காட்டுவது பற்றியும் தனது( பிரித்தானியா) வரம்புகளுக்கு அப்பாற் சென்று செயற்படுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் தவறாக விளங்கிக்ககொண்டதாகவே தெரிகிறது.
"விக்கிலீக்ஸ்' தொடர்பான அண்மைக்கால செய்திகளில் இருந்து பிரித்தானிய அரசியல்வாதிகள் தாம் தீர்மானங்களைச் செய்யும் போது எந்தளவுக்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்களுடைய வாக்குகளை கவனத்தில் கொண்டுள்ளனர் என்பது நன்கு புலனாகும்.
ஜனாதிபதியின் ஆளுமை
மேற்குலக நாடுகளின் மன உணர்வுகள் அவை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களது உணர்வுகளாகவோ அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களினதாகவோ அல்லது அந்நாடுகளின் இன்றும் போதிய ஆதரவுடன் செயற்பட்டு வரும் மனித உரிமைக்கு ஆதரவு காட்டி செயற்படும் குழுக்களாகவோ இருக்கலாம்.துரதிர்ஷ்டவசமாக இலங்கை அரசாங்கத்தின் சில பிரிவினர் அத்தகைய மன உணர்வுகளுக்கு கீழ்ப்படியாது தாம் செயற்படாலம் என்றும் தொடர்ந்தும் தாம் சுபிட்சத்துடன் வாழலாம் என்றும் நம்புகின்றனர்.ஒரு நாடு சிறியதோ அல்லது பெரியதோ எதுவானாலும் அந்நாடு எந்தளவுக்கு தனக்கு சிநேகிதர்களையும் ஆதரவாளர்களையும் கொண்டுள்ளதோ அந்தளவுக்கு தான் அது அந்நாட்டுக்கு நன்மையாக அமையும், நாம் மறந்துவிடக்கூடாத ஒரு முக்கிய தகவல் உண்டு. இலங்கை அரசாங்கம் இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிட்டு தனக்கு சாதகமான இறுதி முடிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையில் முன்னாள் அரசாங்கத்தின் தலைமைதாங்கிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் அடிப்படையான சில ஏற்பாடுகளை செய்திருந்தமையினை மறந்து விடக்கூடாது.அவர்கள் இருவருமே இன முரண்பாடுகளுக்கான அரசியல் தீர்வுக்கு பேரம் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்ற கொள்கையில் உடன்பாடு கொண்டிருந்தனர். இத்தகைய ஈடுபாடு கொண்ட நிலைப்பாடே 1983 ஆம் ஆண்டின் பின்னர் மேற்கத்தைய நாடுகளுடன் முழுத்தோல்வி கண்டிருந்த இராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கத்தினால் மீண்டும் கட்டி எழுப்ப காரணமாயிருந்தது.
இலங்கை அரசாங்கம் அதற்கு வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் இருந்து வரும் சவாலினையும் மேற்கத்தைய நாடுகளின் இலங்கைக்கு எதிரான விமர்சனக் கருத்துகளையும் எதிர்த்து வெற்றி அடைய வேண்டுமானால் அவர்களது மைய ஆர்வங்களை கவனித்து ஆவன செய்ய முற்படவேண்டும். இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகப்பெற்ற வெற்றிக்கு புலிகள் ஆயுதக் கொள்வனவுக்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளிநாடுகளில் அவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள் தடுத்து நிறுத்தியதனால் ஏற்பட்ட சாதகமான விளைவுகளை நாம் மறந்து விடக்கூடாது.அத்தகைய ஏற்பாடுகள் அரசாங்கத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது அவர்களது பல அலுவலகங்கள் சர்வதேச ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தன.அவற்றிலிருந்த புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதுடன் அந்நாடுகளில் புலிகள் இயக்கமும் தடை செய்யப்பட்டது.குறிப்பாக இந்தியா,ஐக்கிய அமெரிக்கா,கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் யாவற்றிலும் இயங்கிக் கொண்டிருந்த புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.அதனால் இலங்கைக்கு எதிராக அவ்வியக்கம் யுத்தம் செய்வதற்கான திறமையானது மழுங்கடிக்கப்பட்டது.இதனால் புரட்சி இயக்கத்திற்கும் அரசுக்கும் இடையேயான சமச்சீரற்ற படைப்பலத்தின் நிலை ஏற்பட்டதனால் இறுதியில் அரசாங்கம் வெற்றியினை ஈட்டியது.
ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்பியபோது ஒரு பெரும் திரளான கூட்டம் அவரை வரவேற்க கூடியிருந்தது.பெரும்பாலான இலங்கையர்கள் அவருக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவர், நிலைமையை விவாதிப்பதனால் ஜனாதிபதி ராஜபக்ஷவை விட வேறெந்த அரசியல் தலைவராலும் இலங்கையில் இன முரண்பாடுகள் பொறுத்து தீர்வொன்றினை பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டுவர முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் உச்சகட்டத்தில் அவர் தனக்கு எதிரான விமர்சகர்களிடம் தற்போதுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் இன்னும் சிலவற்றினையும் இணைத்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை தான் வழங்கப்போவதாக உறுதிமொழி கூறியிருந்தார்.ஆனால், 13 ஆவது திருத்தச்சட்டத்தையே அவர் இப்போது உதறித்தள்ளிவிட்டார். அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கொண்ட குழு ஒன்றினை தானே யுத்த காலத்தில் நியமித்தார். சகல தரப்பினரும் இனமுரண்பாடுகளை நீக்குவதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு தீர்வினை கொண்டு வருமாறும் அக்குழுவுக்கு பணித்திருந்தார். அந்த அறிக்கை ஜனாதிபதியின் அலுவலக நிலையடுக்குப்பெட்டியில் (கபேட்) தூசு படிந்து வருகின்றன. அந்த நிலையடுக்குப் பெட்டிக்கும் (கபேட்) இலங்கைக்கு சாதகமாக சர்வதேச அபிப்பிராயங்களை மாற்றுவதற்குமான திறவுகோல் ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’