மட்டக்களப்பு புதிய பஸ் நிலைய கட்டிடத்திற்கு முன்பாக இன்று வெள்ளிகிழமை காலை இரத்த வாந்தி எடுத்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடலம் பழுகாமம் 2 ஆம் பிரிவு, புதிய வன்னியார் நகரை வசிப்பிடமாக கொண்ட 42 வயதான பொன்னையா தம்பிரெட்ணம் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டுள்ளது.
இவர் இருதய நோயாளி என அடையாளம் காணப்பட்ட வைத்திய அறிக்கைப் பத்திரம் இவரின் மேலங்கியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நடத்திவருகின்றனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’