வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 டிசம்பர், 2010

விக்கி லீக் நிறுவனருக்குப் பிணை

ண்டனில் காவல் துறையினரிடம் கடந்த வாரம் சரணடைந்த, விக்கி லீக் இணையதளத்தின் நிறுவனரான ஜூலியன் அசான்ச் அவர்களுக்கு லண்டன் நீதிமன்றம் பிணை அளித்துள்ளது.
அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக புகழ் பெற்ற ஜூலியன் அசான்ச் ஸ்விடனில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் தாக்குல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் தேடப்பட்டுவருகிறார்.

தான் ஸ்வீடனுக்கு அனுப்பப்படக்கூடாது என்று அசான்ச் வாதி்ட்டு வருகிறார். இந்நிலையில் நீதிமன்றப் பிணை கிடைத்தாலும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் குறித்த நேரத்துக்குள் மேல் முறையீடு செய்தால் ஜூலியன் அசான்ச் மேலும் 48 மணி நேரம் சிறையில் இருக்க நேரிடும் என்று பிபிசி நிருபர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இதே நேரம், ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக ஜூலியன் அசான்ச் மீது எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று அமெரிக்க அரசு ஆராய்ந்து வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’