வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 நவம்பர், 2010

அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்குகொண்டார்.

லங்கையிலுள்ள பிரதான கிறிஸ்தவ திருச்சபைகளில் ஒன்றான அமெரிக்க சிலோன் மிஷன் திருச்சபை இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட இருநூறாவது ஆண்டு நிறைவு விழா இன்றையதினம் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட வேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக பங்குகொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மானிப்பாயில் அமைந்துள்ள தேவாலயத்தில் திருச்சபையின் தலைவர் வணக்கத்திற்குரிய அ.ஜெயக்குமரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் திருச்சபைத் தலைவர் வணக்கத்திற்குரிய ஜெயநேசன் அமெரிக்க திருச்சபைப் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி மூஸ் ஆகியோருடன் நாடெங்கிலும் இருந்து வருகை தந்த சகல குருமார் மற்றும் திருச்சபை மக்களுடன் பெருமளவிலான பொதுமக்களும் இன்றைய நிகழ்வில் பங்குகொண்டனர்.

இங்கு தலைமையுரையாற்றிய வணக்கத்திற்குரிய ஜெயநேசன் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தம்முடனும் திருச்சபையுடனும் பேணிவரும் நல்லுறவுகளை வெளிப்படுத்தியதுடன் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்து பங்கெடுத்து வருவதற்கு திருச்சபை மக்களின் சார்பில் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இருநூறாவது ஆண்டினை பூர்த்தி செய்த அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபைக்கும் அதன் தலைவர் முன்னாள் தலைவர் குருமார் மற்றும் அங்கத்தவர்களுக்கும் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவர்கள் அமெரிக்காவில் துளிர்விட்ட பக்தி இயக்கத்தின் பயனாக இலங்கையின் வடபகுதிக்கு வருகை தந்த அமெரிக்கன் திருத்தொண்டர்களினால் யாழ்ப்பாணம் பெற்றுக்கொண்ட பயன்கள் எண்ணிலடங்காதவை எனத் தெரிவித்தார். தாம் ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை மானிப்பாயில் இயங்கியதை நினைவுகூர்ந்த அமைச்சரவர்கள் மானிப்பாய் எனக்கு புதிதல்ல எனக்குறிப்பிட்டதுடன் அன்றிலிருந்தே திருச்சபையுடனும் அதன் அங்கத்தவர்களுடனும் தமக்கிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார்.

மேலும் இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இத்திருச்சபையினால் கல்விக்கூடங்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் பத்திரிகைகள் அச்சுக்கூடம் அகராதிகள் என யாழ்ப்பாணம் பெற்றுக் கொண்ட பயன்கள் எண்ணிலடங்காதவை என்பதுடன் யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியத்திற்கும் வித்திட்டதே அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை எனத்தெரிவித்தார். அத்துடன் பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கும் சமூக விழிப்புணர்விற்கும் திருச்சபை அடித்தளமிட்டதையும் நினைவுகூர்ந்தார்.

இன்றைய நிகழ்வில் திருச்சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அமெரிக்க திருச்சபைப் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி மூஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமெரிக்க சிலோன் மிஷன் திருச்சபை இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட இருநூறாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி தேவாலயத்திற்கு முன்னாள் உள்ள பிரதான வீதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வணக்கத்திற்குரிய அ.ஜெயக்குமரன் வணக்கத்திற்குரிய ஜெயநேசன் அமெரிக்க திருச்சபைப் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி மூஸ் ஆகியோரினால் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன் சிறார்களினால் பலூன்களும் வானில் பறக்க விடப்பட்டன.


















.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’