வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 நவம்பர், 2010

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வட, கிழக்கு அபிவிருத்தியில் ஈடுப்பட விருப்பம்: பீரிஸ்

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விருப்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
.அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போதே பீரிஸ் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும். யுத்த காலப்பகுதியில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது நிலைமை மாறியுள்ளது.
தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’