சர்வதேச மன்றங்களில் இலங்கை அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் இப்பிராந்தியத்தின் பொருளாதார ஜாம்பவான்களான சீனா, இந்தியா போன்ற நாடுகளை எட்டிப்பிடித்து, அவர்களுடன் இணைந்து நடக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இன்று. அம்பாந்தோட்டை 'மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திற்கு' முதலாவது கப்பல் வருகை தரும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இப்புதிய துறைமுகம் திறக்கப்பட்டதன் மூலம் உலக வரைபடத்தில் இலங்கை துடிப்பான வேகமான பொருளாதார வளர்ச்சிகொண்ட நாடாக தனது இருப்பை நிரூபித்துள்ளது எனவும் ஜனாதிபதி கூறினார்.
கடல், வான், சக்தி, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பாரிய வெற்றியடைந்து ஆசியாவின் கேந்திர நிலையமாக மாறுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. மாகம்புர துறைமுகத்தின் முதல்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தமை இலங்கை மக்களின் வினைதிறனையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
சீன பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வும் நட்புறவும் இதற்கு பங்காற்றியுள்ளது' என அவர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’