வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 நவம்பர், 2010

கடந்த வாரம் இப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பின் நிலை பற்றி எழுதும் போது புலிகள் மற்றும் புலிகள் சார்பான வெளிநாட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றை விரிவாக இரண்டு பிரிவாக வகைப்படுத்தலாம் எனக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் முதல் வகையானது அமைப்புக்களை உள்ளடக்கிய குழுக்கள், அவை முன்னணி அமைப்புக்களோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளையோ கொண்டவையாகும். இந்த வகையினரைப் பற்றி கடந்த வாரம் நான் விரிவாக எழுதியிருந்தேன். இந்த அமைப்புக்களாவன நியுயோர்க் சட்டத்தரணி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையின் கீழ் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். மற்றது ஜேர்மனியைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுருவான பிதா.எஸ்.ஜே.இம்மானுவல் அவர்களின் கீழ் இயங்கும் குளோபல் தமிழ் அமைப்பு, அடுத்தது நோர்வேயில் வாழும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரனின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகள் மற்றும் முன்னணிகள் போன்ற வலையமைப்புகள். இந்தவாரம் நான் வெளிப்படுத்த விரும்புவது, இரண்டாவது வகை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பைப் பற்றி. இவை வெளிப்படையாகத் தெரியாதவையும் கணக்கிட முடியாதவையும் ஆகும். இந்த வகையானவை மிகவும் ஆபத்தானவை ஏனெனில் இவற்றின் இரகசியப் பாணியிலான நடைமுறைகளும் தீவிரவாதக் குறிக்கோளும் தமிழ் புலம் பெயர்ந்தோர் சுற்றாடலில் காணப்படும் ஒரு வகை உணர்வு மிக்க “உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகள்” எனக் கருதலாம்.

மேலும் குறிப்பிட்டுக் கூறவேண்டியது பெப்ரவரி 2009 ல் நடந்த சண்டையில் கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்ட புலிகளின் கேணல் தரத்தைக் கொண்ட சிரேஷ்டதலைவர் ஒருவரை இவ்வமைப்பு தனது புதிய தலைவராகத் தேடிக் கொண்டுள்ளது. உயிர்த்தெழுந்த இந்த புலித்தலைவரைப் பற்றியும் அவரின் கீழ் இந்த உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் மீள அணிசேருவதைப் பற்றியும் மேலும் விபரமாக விளக்குவதற்கு முன்னதாக முதலாவது வகையான தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான குழுக்களின் சிறப்பியல்புகளின் முக்கியத்துவம் பற்றி கூற விரும்புகிறேன்.

நாடுகடந்த அரசாங்கம் - குளோபல் தமிழ் அமைப்பு

இந்தப் பிரிவுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புடன் உறவுகளைக் கொண்டிருந்த போதிலும் வெளிப்படையாக உலகின் பல பாகங்களிலும் இயங்கி வருகின்றன. நாடுகடந்த அரசாங்கம் மற்றும் குளோபல் தமிழ் அமைப்பு என்பனவற்றின் செயற்பாடுகள் பொதுவாகத் தெளிவானதும் வெளிப்படையானதும், சிலவற்றை மதித்து பதில் சொல்லும் உத்தரவாதத்துக்கான பங்களிப்பையும் கொண்டிருக்கின்றன.

நாடுகடந்த அரசாங்கம் பிலடெல்பியாவிலும் நியுயோர்க்கிலும் இரண்டு பகிரங்க மாநாடுகளை நடத்தியிருந்தது. அதன் வெளிப்படையான நிர்வாகக் கட்டமைப்பில் 135 அங்கத்தினர்களைக் கொண்ட சபையில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதமர், பிரதிப் பிரதமர், ஏழு ஆய அமைச்சர்கள், மற்றும் பத்து பிரதி அமைச்சர்கள் உள்ளனர். ஒரு இரண்டாவது சபைக்கான பிரதிநிதிகளையும் விரைவில் தெரிந்தெடுக்கப் பட இருக்கிறார்கள். நாடுகடந்த அரசாங்கம் ஒரு நிரந்தர அலுவலகத்தை நியுயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெகு அண்மையில் அமைக்கப் போகிறது. நாடுகடந்த அரசாங்கம் ஸ்ரீலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் சேவைகள் உள்ளிட்ட மனதில் பதியத்தக்க நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கியுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கமானது அடையாளப்படுத்தப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்தின் எல்லா அங்கத்தினர்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்து நாடுகடந்த அரசாங்கத்துக்கு தனது எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது. அத்தோடு எவ்வாறு இந்த அமைப்பு நம்பத்தக்க விதத்தில் தனது நிகழச்சித் திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போகிறது என்பதைக் காண்பதற்காகக் காத்திருக்கிறது. நெடியவனின் கட்டுப்பாட்டில் உள்ள காரணிகளாலும் நாடுகடந்த அரசாங்கம் பயங்கர அழுத்தத்தையும் எதிர் கொள்கிறது.

குளோபல் தமிழ் அமைப்பு ஆதாயம் எதிர்நோக்காத சேவை மனப்பான்மை கொண்ட ஒரு குடை வலையமைப்பு. அதன் தலைவராக முன்னாள் யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட பிரதான ஆயர் பிதா. எஸ். ஜே. இம்மானுவல் அவர்களைக் கொண்டிருக்கிறது. குளோபல் தமிழ் அமைப்பு நியாயமான தூரத்துக்கு பகிரங்கமாகச் செயலாற்றுகிறது. குளோபல் தமிழ் அமைப்பின் வாழ்வாதாரம் பிரித்தானியத் தமிழ் அமைப்பு என்றே கூறலாம். குளோபல் தமிழ் அமைப்பு பிரித்தானியாவின் லண்டனில் ஒரு காரியாலயத்தை அமைப்பதற்காக அதிகளவு முயற்சிகளை மேற்கொண்டதற்காக பிரித்தானிய தமிழ் அமைப்புக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். அதில் சில வேளை குளோபல் தமிழ் அமைப்பின் சாதனையாகக் குறிப்பிட்டுக் கூறவேண்டுமாயின், முன்னாள் லேபர் கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவரான ஜோன் ரயான் அம்மையாரை தனது லண்டன் காரியாலயப் பொறுப்பாளராக ஆட்சேர்ப்புச் செய்ததை சொல்லலாம். ரயான் நாளாந்த மற்றும் வாராந்தர அடிப்படையில் தனக்கு உதவுவதற்காக இரண்டு இளம் ஆராய்ச்சியாளர்களைப் பெற்றுள்ளார். குளோபல் தமிழ் அமைப்பு தனது அலுவலகத்துக்கு பொதுசனத் தொடர்பு அலுவலர் மற்றும் பத்திரிகை அலுவலர்கள் உள்ளிட்ட முழுத்தகுதி வாய்ந்த அலுவலர்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குளோபல் தமிழ் அமைப்பு அதன் அமைப்பின் அங்கத்தினர்கள் ஊடாக அரசாங்க அமைச்சர்கள், சட்டவாளர்கள், உயர்தர நிருவாகத்தவர்கள், மற்றும் பல மேற்கு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குளோபல் தமிழ் அமைப்பு வெளிப்படுத்துவது சர்வதேச அழுத்தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்தி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை கொழும்பு அரசாங்கத்தை உருவாக்க வைப்பதற்கும் சர்வதேச கூட்டு முயற்சியால் ராஜபக்ஸ ஆட்சியை ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூறும் உத்தரவாதத்தை ஏற்படுத்துவதுமே தமது நோக்கம் என்று.

நெடியவன்

நெடியவன் அல்லது நெடியவனால் முன்னிலைப் படுத்தப்படும் வலையமைப்பு நாடுகடந்த அரசாங்கம் மற்றும் குளோபல் தமிழ் அமைப்பு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையைக் கொண்டது. அது முதலாவதாகக் கொண்டிருப்பது செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளையும் மற்றும் முன்னணி அமைப்புக்களையும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பானது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அநேக மேற்கத்தைய நாடுகளில் தடை செய்யப் பட்டதுடன் அடையாளம் காணப்பட்ட பல புலிகளின் கிளைகள் செயலற்றதாக மாறின அல்லது தம்மை புதிய உரு பொருட்களாக மாற்றிக் கொண்டன. புதிய முன்னணிகளும் தாபிக்கப் பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இணையத்தளமான தமிழ் நெற்றின் ஆசிரியர் ஜெயா அண்ணை என்றழைக்கப்படும் ஜெயச்சந்திரன் கோபிநாத் எனும் மதியுரைஞரின் சொந்தப் பாணியில். நெடியவன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் மறை குழுவானது வழி நடத்தப்படுகிறது. நெடியவன் குழு கடுமையாக எதிர்ப்பது உருத்திரகுமாரனால் வழிநடத்தப்படும் நாடுகடந்த அரசாங்கத்தையும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்ந்தவராக விசுவசிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் என்கிற கே.பி.யையும். எப்படியாயினும் குளோபல் தமிழ் அமைப்பின் தலைவர் பிதா. இம்மானுவல் அவர்கட்கும் நெடியவனுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன, இது முன்னவரை தனது இலட்சிய ஞானத் தந்தையாக பின்னவர் மதிப்பதன் காரணமாக. உருத்திரகுமாரனின் நாடளாவிய பகுதிகளான நாடுகடந்த அரசாங்கத்திற்கு எதிர் முனைப்பான முயற்சியாக நெடியவன் குழுவும் வௌ;வேறு நாடுகளிலுள்ள புலம் பெயர் தமிழர்களிலிருந்து தேர்தல் முறைப்படி தெரிவு செய்யப்படும் அமைப்பான வலையமைப்பொன்றை உருவாக்கியுள்ளது.

இந்த அமைப்புக்கள் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பேரவை அல்லது தேசியப் பேரவை என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்புக்கள் வௌ;வேறு நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்களிடையே 1976 மே 14ல் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து எழுப்பப் பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்த ஆதரவு கோரி தொடராகப் பல பொதுவாக்கெடுப்புகளை நிகழ்த்தின. சமீப காலமாக குளோபல் தமிழ் அமைப்புக்கும் நெடியவனின் வலையமைப்புக்கும் இடையில் போலியான ஒற்றுமையை ஏற்படுத்தி உருத்திரகுமாரனால் வழிநடத்தப்படும் நாடுகடந்த அரசாங்கத்தைத் தனிமைப் படுத்துவதற்காக கடுமையான எதிர் முனைப்புகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பிதா.இம்மானுவலினதும் நெடியவனினதும் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒற்றுமைப் பேச்சு வார்த்தைகள் வரும் நவம்பர் 12ந் திகதி வெள்ளிக்கிழமை நோர்வேயில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நோர்வேயைத் தளமாகக் கொண்ட தமிழ் நெற் ஆசிரியர் குழு அங்கத்தவர்களே இந்தப் பேச்சுக்கான அங்கீகரக்கப் பட்ட ஏற்பாட்டாளர்கள்.

இரட்டைத் தன்மை

நெடியவனின் கட்டுப்பாட்டில் உள்ள வலையமைப்பை நான் முதலாவது பிரிவான புலிகள் மற்றும் புலிகள் ஆதரவுக் கட்டமைப்பில் சேர்த்திருந்தாலும் கூட அதை அப்பிரிவினுள் உள்ளடக்குவது கடினமானதும் இணக்கமற்றதுமாகும். ஏனெனில் இயற்கையாக அது கொண்டிருக்கும் இரட்டைத்தன்மையே காரணம். இந்த செயற்படுனர்கள் எல்லாம் ஒரு நிலையில் தங்களை ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் என வெளிப்படுத்திக் கொண்ட போதிலும், மறு நிலையில் அவர்கள் நிழலான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது ஏனென்றால் இந்தக் கருவிகள் யாவும் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகள் தங்களைச் சட்டபூர்வமான அரசியல் அமைப்புக்கள் எனப் பாசாங்கு செய்கின்றன. அதனால்தான் நெடியவனின் வலையமைப்பு அதன் பாசாங்குத் தன்மைக்கு புறமே நாடுகடந்த அரசாங்கத்துடன் அல்லது குளோபல் தமிழ் அமைப்புடன் ஒப்பிடும்போது அது வெளிப்படையானதோ பொறுப்புக் கூறும் உத்தரவாதமுடையதாகவோ இல்லை. அதன் அரசியல் நம்பகத்தன்மை இன்னும் அதிக எதிர்பார்ப்புக்கு வழி விடுகிறது. அநேகமான நெடியவனின் பின்தொடர்பாளர்கள் வன்முறையில் ஈடுபடாதவர்களல்ல.

நெடியவனின் வலையமைப்பானது பல விடயங்களை தெளிவில்லாமல் மூடி மறைப்பதுடன் அநேகமான அதன் செயற்பாட்டாளர்கள் விவாதத்துக்குரிய பல நிழலான காரியங்களில் ஈடுபட்டிருக்கும் கடந்த காலத்தைக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் முக்கிய அலுவலகப் பணியாளர்களாக கடமையாற்றுபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் அல்லது முன்னாள் அங்கத்தவர்கள் என்பதுடன் ஆயுதப் பயிற்சியும் அதேபோல் போர்முனை அனுபவமும் கொண்டவர்களாக உள்ளார்கள். மேலும் சமீப காலங்களில் நெடியவனின் குழுவினர், போதைப் பொருள், கள்ளக்கடத்தல், கடனட்டை மோசடி,கள்ள நாணயத்தாள் பரிமாற்றம் மற்றும் கடவுச் சீட்டு மோசடி என்பனவற்றுடன் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப் பட்டுள்ளனர்.

இந்தப் பத்தியில் நெடியவனைப் பற்றி நிறையவே எழுதியாகிவிட்டது. அவரது பின்புலம் மற்றும் சூழ்நிலைகள் அவரை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் புலிகள் மற்றும் புலிகள் சார்பான கட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிற்கு வழிநடத்தியிருக்கிறது. நெடியவன் தனது 18வது வயதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்து ஆயுதப் பயிற்சியும், போர்முனை அனுபவங்களையும் பெற்றார். புலனாய்வுப் பணியாளராக வேலை செய்த பின் நெடியவன் அவரது பிரிவுத் தலைவர் கஸ்ட்ரோ என அழைக்கப்படும் வீரகுலசிங்கம் மணிவண்ணனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளின் ஒருங்கிணைப்புத் தலைவராக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப் பட்டார். 1991ம் ஆண்டு நடந்த ஆனையிறவுப் போரில் கஸ்ட்ரோவுக்கு காயங்கள் ஏற்பட்டு கழுத்துக்கு கீழே செயலற்றிருந்த போதும்கூட மே 2009ல் ஏற்பட்ட அவரது மரணம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு நிருவாகத் தலைவராக கஸ்ட்ரோ கடமையாற்றியிருந்தார். மோதல் விரிவடைந்திருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்துக்கும் வெளிநாட்டுக் கிளைகளுக்குமான தொடர்புகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த போது வெளிநாட்டுக் கிளைகளை நிருவகிப்பதற்காக கஸ்ட்ரோ நெடியவனுக்கு அதிகளவிலான தன்னியக்க உரிமையை வழங்கியிருந்தார்.

முள்ளிவாய்க்காலில் மே 2009ல் ஏற்பட்ட எதிhபாராத அழிவினால் நிகழ்ந்த கஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னர் நெடியவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு நிருவாகத்தினை முற்றாக தன்வசப் படுத்திக்கொண்டார். நெடியவன் ஆரம்பத்திலிருந்தது போல செல்வராசா பத்மநாதனின் தலைமையுடன் ஆத்திரமும் எதிர்ப்பும் கொண்டவராகவே இருந்தார். இது கஸ்ட்ரோவுக்கும் கேபிக்கும் இடையில்
இருந்த பகைமையின் தொடர்ச்சியான நிலைப்பாடாகவே இருந்தது. இதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு புலம் பெயர்ந்தவர்களிடையே கூரிய இரு பிரிவாக கேபிக்கு விசுவாசமுள்ள ஒரு பிரிவாகவும் கஸ்ட்ரோவின் விசவாசிகள் மறு பிரிவாகவும் பிளவடைந்தது.

வலையமைப்பு

மலேசியாவில் நிகழந்த கேபியின் உணர்ச்சிகரமாக கைப்பற்றலின் விளைவாக அவர் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப் பட்டார். அதன் விளைவாகக் காட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் நெடியவன் திரும்பவும் ஆதிக்க மிகை உள்ளவரானார். எப்படியாயினும் கேபியின் விசுவாசிகள் உருத்திரகுமாரனின் பின்னால் அணிதிரண்டு நாடு கடந்த அரசாங்கத்தை உருவாக்கி முன்னிலைப் படுத்தினர். நெடியவனால் வழிநடத்தப்படும் மறைகுழுவினர் நாடுகடந்த அரசாங்கத்துக்கு குழிபறிக்கவோ, அதை உடைக்கவோ அல்லது கைப்பற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அவை தோல்வியில் முடிவடைந்தன. மேலும் கேபிக்கும் உருத்திராவுக்கும் உள்ள உறவுகள் பிளவடைந்துள்ள போதிலும் பிரதமர் உருத்திரா அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். நெடியவனின் வலையமைப்பை சீர்குலைப்பது எதுவென்றால் பெரும்பான்மையான தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் அதன் முக்கிய செயல்பாட்டாளர்களின்
இடையில் உள்ளதுதான். பல வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த வெளிநாட்டுக் கிளைகளும் முன்னணிகளும் ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் அங்கம் வகித்திராத ஆதரவாளர்களாலும் செயற்பாட்டாளர்களாலுமே நிருவகிக்கப்பட்டு வந்தன. பெரும்பாலான முன்னாள் புலிகள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக வந்தபோது தங்கள் புலித் தொடர்புகளை வெளிப்படையான காரணங்களுக்காக மறைத்து புலிகளின் கட்டமைப்பு அடையாளங்களை வெளிக்காட்டுவதை விடவும் தங்களுக்கு வாழ்வளித்த நாடுகளின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பிரஜைகளாகத் தம்மைத் தொகையிட்டுக் கொள்வதையே தெரிவு செய்தார்கள்.

ஒஸ்லோ சமாதானத் தரகு நடவடிக்கையினால் 2002 – 2005 வரையான காலப் பகுதியில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் மேலிடம் வெளிநாட்டுத் தலைவர்களை ஸ்ரீலங்காவில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு மாற்றியமைப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டது. அவ்வாறு நினைப்பதற்கான காரணம் வெளிநாட்டுக் கிளைகள் திறமையாகச் செயற்படுவதில்லை ஏனெனில் அதை நிருவகிப்பவர்களுக்கு துணிந்து செயலாற்றவும், சுறுசுறுப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய துணிவும் திறமையும் குறைவாக இருப்பதாலேயே.

இந்த முடிவின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் போர்நிறுத்த காலத்தைப் பயன் படுத்தி சில அங்கத்தவாகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள புலிகளின் நிலைகளை பொறுப்பேற்க வைத்தனர். மேலும் முன்பு வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாடுகளில் குடியுரிமையோ, நிரந்தர வதிவிட உரிமையோ பெற்றிருக்கும் சில முன்னாள் புலி உறுப்பினர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிக்கு வரவழைத்து அவர்களுக்கு சில தலைமைத்துவப் பயற்சிகளை அளித்து அவர்களை அவர்களின் நாட்டிற்குத் திருப்பி அனுப்பி அந்தந்த நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க வைத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் பல வெளிநாட்டு தமிழ் செயற்பாட்டாளர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து அவாகளுக்கு எல்லா விதமான பயிற்சிகளையும் வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான முன்னணி நடவடிக்கைகளுக்க வேண்டி அவர்களைத் திருப்பி ஆனுப்பி வைத்தார்கள். இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள், இளைஞர்கள். இந்த முயற்சியின் விளைவாக குறைந்தது 23 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளின் தலைமைப் பொறுப்பினை விசேட பயிற்சியும் களநிலை அனுபவமும் கொண்ட புலிகள் அல்லது முன்னாள் புலிப் போராளிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். நெடியவனும் இந்த ஊக்க முயற்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தன்னை நோர்வேயில் நிலை நிறுத்திக் கொண்டார். கஸ்ட்ரோவின் பிரியத்துக்கு உகந்தவரானபடியினால் முழுப் பொறுப்பையும் நிருவகிக்கும் வெளிநாட்டு வலையமைப்பின் தலைமை இணைப்பாளராக நெடியவன் அமர்த்தப் பட்டார். இயற்கையாக வழங்கப்பட்ட இரகசியப் பண்புகளையும் ஒளிவு மறைவான தன்மைகளையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்குலகில் இந்தப் போக்குகளை மேலும் அதிகரித்துக் கொண்டனர். இன்னும் கூறப்போனால் அதன் செயற்படுனர்கள் சட்டத்தால் தடை செய்யப் பட்ட வழிகளினால் நிதி சேகரிப்பதிலும்; ஈடுபட்டிருந்தார்கள். அச்சுறுத்தல்களும் உடல்சார்ந்த வன்முறைகளும் இதில் இடம் பெற்றன. கூட்டிச் சோத்தால் இது குற்றச் செயல்களின் தொடர்பேயாகும்.

எனவே நெடியவன் கட்டுப்பாட்டில் உள்ள வலையமைப்பின் நடைமுறைப் பாணியும் அமைப்பின் கட்டமைப்பும் கூடுதலாக நிழலான செயற்பாடுகளைக் கொண்ட இரண்டாவது வகையினையே சாரும் நான் அதனை நாடுகடந்த அரசாங்கம் மற்றும் குளோபல் தமிழ் அமைப்பு உள்ள முதலாவது வகையில் சேர்த்திருந்தாலும் கூட.சுருக்கமாகக் கூறினால் நெடியவனின் வலையமைப்பு இருக்கிறது ஆனால் அது முதலாவது வகையில் இல்லை.

தொடரும்

தமிழில் எஸ்.குமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’