அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்னவுக்காக ஆஜரான அறிவுறுத்தும் சட்டத்தரணி, உதுல் பிரேமரத்னவை பிணையில் விடுமாறு கோரும் பிணை விண்ணப்பத்தை இன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஒக்டோபர் 14 இல், பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு வளாகத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 152,834 ரூபாய் பெறுமதியான பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த பிணை விண்ணப்பம் நாளை மேல் நீதிமன்ற நீதிபதி தீபலி விஜயசுந்தர, முன்னிலையில் விசாரணைக்கு வரும்.
உதுல் பிரேமரத்ன, இரண்டு வாரங்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில்தான் புதிய பிணைகோரும் விண்ணப்பம் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’