வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 நவம்பர், 2010

பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பேணி பாதுகாப்பது எமது கடமையே - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

ண்பாடுகளையும் கலாசாரங்களையும் பேணிப் பாதுகாப்பது எமது மிகப் பெரிய கடமையே. பாரம்பரிய மிக்க எமது சமூகம் சீரழிந்து போகாமல் நற்பண்புகள் கொண்ட சமூகமாக கட்டியெழுப்ப வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகுமென ஈ.பி.டி.பி. பராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (16) வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் நேர்த்தியாக குறித்த பிரதேசங்களில் அமுல்படுத்தப்படுகிறதா என்பதனை மக்கள் அமைப்பு பிரதிநிதிகள்தான் இங்கு வெளிப்படுத்த வேண்டும். இக்கூட்டத்திற்கு ஒவ்வொரு துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் சமூகமளித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறைநிறைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் இடத்தில் நாம் அந்தந்த துறைசார் அதிகாரிகளுடன் பேசி தீர்வுகளையும் காணலாம்.

இப்பிரதேசங்களில் இடம்பெறுகின்ற எல்லாத் திட்டங்களுக்குமான பயனாளிகள் தெரிவு செய்கின்ற போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்து அனுமதி பெறப்படல் வேண்டும். அதுமாத்திரமன்றி அந்தந்த பிரதேசங்களில் மக்களின் பார்வைக்கு பதினான்கு நாட்களுக்கு முன் கிராம அலுவலகங்கள பிரதேச செயலகங்களின் விளம்பர பலகையில் காட்சிப்படுத்தவும் வேண்டும்.

ஒவ்வொரு சந்தைகளுக்கும் சந்தை அபிவிருத்தி குழு என ஒன்றை நியமித்து அதன் மூலம் சந்தை அபிவிருத்தி விலை நிர்ணயங்கள் உட்பட சந்தைகளின் செயற்பாடுகளை தீர்மானிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதோடு உள்ளுர் உற்பத்தியாளர்களின் பொருட்களை சந்தைப்படுத்தும் போது பெறப்படுகின்ற 10 வீத பொருட் கழிவை நிறுவத்துவதற்கும் பிரதேச சபை செயலாளருக்கும் பணிப்புரை விடுத்தார்.

அத்தோடு சமூகத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோத செயல்கள் திருட்டுகள் என்பனவற்றை கட்டுப்படுத்த பொலிஸாருடன் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதற்காக அப்பிரதேசத்தில் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட ஐந்து தொகுதிகளாக பிரித்து அதன் மக்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் பொலிஸாரும் சேர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கல்வி, சுகாதாரம் மின்சாரம் வீதி அபிவிருத்தி பிரதேசசபை செயற்பாடுகள் விவசாயம் என 32 துறைகள் தொடர்பிலும் விரிவாக அந்தந்த துறைகளின் அதிகாரிகளுடனும் மக்கள் அமைப்பு பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி தீர்மானங்களும் எடுக்கப்பட்டதோடு எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களின் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி உதவிப் பிரதேச செயலர் திருமதி யசோதா பிரதேச சபை செயலாளர் திருமதி சுலோசனா சுன்னாகம் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி தியாகராசா பிரதேச இராணுவ அதிகாரி உள்ளிட்ட நிறுவனங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் கிராம அலுவலர்கள் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’