யாழில் ஜே.வி.பி. மீது மிலேச்சத்தனமாக நடத்தப்பட்ட அரசின் பயங்கரவாதத் தாக்குதல்களை தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த காலங்களில் அரச பயங்கரவாத்திற்கு ஆதரவளித்த ஜே.வி.பி. இன்று தமிழ்மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதை நாம் வரவேற்கின்றோம்.
எனினும் ஜே.வி.பி. கிளர்ச்சிகளில் பங்கு பற்றிய அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதைப்போன்று சகல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜே.வி.பி. கோரிக்கை விடுக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் வடக்கு,கிழக்கில் நடைபெறும் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த தென்னிலங்கையில் உள்ள முற்போக்குச் சக்திகள் முன்வரவேண்டும்.
இதன் மூலம் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி பலமடையாமல் தடுக்க முடியும்.
தமிழ் மக்களுடைய சுயாட்சி உரிமையை ஜே.வி.பி. உட்பட தென்னிலங்கை மக்களும் அங்கீகரிப்பதன் மூலமே இந்நாட்டில் இன நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’