யாழ்.குருநகர் அரச வடிசாலைப் பகுதி மக்கள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அரச வடிசாலையிலும் அதன் வளாகத்திலும் வாழும் மக்கள் சொந்தக் காணிகள் இல்லாமல் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்ற நிலையில் இம் மக்களின் அவலநிலை தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை அடுத்து அப் பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
அதன் பின்னர் யாழ்.மாநகர முதல்வர், யாழ்.நகர பிரதேச செயலாளர் கிராமசேவையாளர் ஆகியோரை தனது யாழ்.அலுவலகத்திற்கு அழைத்து விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள்
நீங்கள் தற்போது வசித்து வருகின்ற பகுதிகளையோ அல்லது வேறு புதிய இடங்களைப் பெற்றுத் தருவதற்கோ அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடவடிக்கை யெடுக்கப்படுமெனவும் தற்போது தங்கியுள்ள இடங்களுக்கு இலவச மின்னினைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’