ஆதாரத்தை அழித்தது தொடர்பான புகாரின் பேரில் செக்ஸ் லீலையில் சிக்கிய நித்தியானந்தாவின் உதவியாளரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.
நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான வீடியோ வெளியாகி நித்தியானந்தாவை பெரும் சிக்கலில் ஆழ்த்தியது. அவர் பெங்களூரை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் அவரை இமாச்சல பிரதேசத்தில் வைத்து கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும் நடிகை ரஞ்சிதா மட்டும் இதுவரே சிக்கவே இல்லை. அவரை போலீஸார் தேடிக் கொண்டே இருக்கின்றனர். நித்தியானந்தா மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த நிலையில் நித்தியானந்தா வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக கூறி நித்தியானந்தாவின் உதவியாளரான சச்சிதானந்தாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக சிஐடி போலீஸார் கூறுகையில், ஆதாரங்களை அழித்தது தொடர்பாகவும், கிரிமினல் சதித் திட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் சச்சிதானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம் என்று சிஐடி தெரிவித்துள்ளது.
பெங்களூர் பிடாதி ஆசிரமத்தில் முக்கியப் புள்ள இந்த சச்சிதானந்தா. நித்தியானந்தாவிடம் சிஷ்யர்களாக சேர்ந்தவர்களிடம் கட்டாயப்படுத்தி சில உறுதிமொழிகளை எழுதி வாங்கினார் நித்தியானந்தா என்பது ஒரு புகார் . அந்தப் புகாருக்கு ஆதாரமாக விளங்கிய அந்த உறுதிமொழிப் பத்திரங்களை சச்சிதானந்தா அழித்துள்ளதாகவே தற்போது அவர் கைதாகியுள்ளார்.
நித்தியானந்தா, ரஞ்சிதா விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது இந்த சச்சிதானந்தாதான் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சச்சிதானந்தா. 2003ம் ஆண்டு சிகாகோவில் வைத்து நித்தியானந்தாவை சந்தித்து அவருடன் இணைந்து கொண்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’