வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 நவம்பர், 2010

ஆபாச நடிகர்களின் படங்கள் பிரசுரிப்பு

பாசப்படங்களில் நடித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டடப்பட்டுள்ள பெண்கள் அடங்கலாக 27 பேரது புகைப்படங்களை இலங்கை சிங்கள பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன.
80 பெண்கள் அடங்கலாக இப்படியான ஆபாச நடிகர்கள் 83 பேரது புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக பொலிஸார் நீதிமன்ற அனுமதியை கடந்த வாரம் பெற்றிருந்தனர்.

அவர்களைக் கைது செய்ய உதவுமாறு கோரி இந்தப் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஆயினும், அவர்கள் குறித்து இன்னமும் பொதுமக்களிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என்று பொலிஸ் தரப்புப் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
இவர்கள் கைது செய்யப்படுமிடத்து, இத்தகைய ஆபாசப்படங்களை தயாரித்தவர்களை இலக்கு வைக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இத்தகைய படங்களை வெளியிடுவதில்லை என்று சில பத்திரிக்கைகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புகைப்படம் வெளியிடப்பட்ட சிலர் 18 வயதுக்குட்பட்ட பெண்களாகத் தெரிவிதாகவும், இவர்களை இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருத வேணடும் என்று வழக்கறிஞர் ரோகன் எதிர்சிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’