அரசாங்கம் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியை முன்னெடுப்பது போன்று மக்கள் பொருளாதாரத்தைபும் மேம்படுத்த வேண்டும்.இல்லையேல் அரசியல் தீர்வை எட்ட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த மூன்று தசாப்தக் கால யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் இன்று படுமோசமான பொருளாதார பிரச்சினைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கென இதுவரையில் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியை முன்னெடுப்பது போன்று மக்கள் பொருளாதாரத்தைபும் மேம்படுத்த வேண்டும்.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இதிலும் தென் பிரதேச மக்களை விட வடக்கு, கிழக்கு மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இடம்பெயர்ந்தனர்.
ஆனால் தற்போது நாட்டில் சுமூகமான நிலை தோன்றியுள்ளதால் தமது சொந்த இடங்களில் மீண்டும் வடக்கு, கிழக்கு மக்கள் குடியேறுகின்றனர். இதனால் இப் பிரதேசங்களை மேம்படுத்தி மக்கள் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’