வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 நவம்பர், 2010

நல்லூர் ஆலயச் சூழலில் கந்த சஷ்டியை முன்னிட்டு மாலைவேளை வீதித் தடை!

ல்லூர் ஆலயச் சூழலில் உள்ள வீதிகளில் எதிர்வரும் வியாழக்கிழமை வரை உற்சவ காலத்தைப் போன்ற வீதித் தடைகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் போடப்பட்டு வருவதாக யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்
தற்போது நல்லைக் கந்தன் ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா ஆரம்பமாகியுள்ளதால் திருவிழா நடைபெறும் ஆறு நாள்களும் ஆலய சுற்று வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளைத் தவிர்க்கும் முகமாக வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் அரசடிச்சந்தி கோயில் வீதி சங்கிலியன் வீதிச் சந்தி பருத்தித்துறை வீதியில் மாநகரசபை அலுவலகத்திற்கு முன்பாக செட்டித்தெரு ஒழுங்கைச் சந்தி பிராமணக்கட்டுக்குளம் ஆகிய ஐந்து இடங்களிலும் தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிவரை வீதித் தடைகள் போடப்பட்டிருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’