விடுதலைப்புலிகள் மீதான தடையினை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிப்பது என்ற நீதிபதி விக்ரம்ஜித்சென் தலைமையிலான தீர்ப்பாயத்தின் முடிவினை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதன்மீது மத்திய அரசு தனது நிலையினைத் தெரிவிக்குமாறு கூறி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்திரவிட்ட்து.
கடந்த ஆண்டு மே மாதத்தில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கையே கூறியிருக்கும் நிலையில், அதற்கும் முன் நடந்த சம்பவங்களை ஆதாரமாக வைத்து அதன் மீதான தடையினை நீட்டிப்பது தவறு என மனுதாரர், சிறைவாசிகளின் நலனுக்கான அமைப்பின் இயக்குநர் புகழேந்தி வாதிட்டிருக்கிறார்.
தவிரவும் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்பட்டிருப்பது கூட விடுதலைப் புலிகளினால் ஏற்படக்கூடிய ஆபத்தை சுட்டிக்காட்டுவதாக தீர்ப்பாயம் கூறியிருக்கிறது.
ஆனால் அவ்வரசின் முதல் கூட்டம் கடந்த மே 17 அன்று நடந்தது, தடையை நீட்டிக்கும் அரசு அறிவிப்போ, அதற்கும் மூன்று நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்டது, இந்நிலையில் தீர்ப்பாய முடிவு செல்லாது எனவும் வாதிடப்பட்டிருக்கிறது.
தலைமை நீதிபதி யூசுஃப் இக்பால் மற்றும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசிற்கும் தீர்ப்பாயத்திற்கும் நோட்டீஸ் அனுப்பச்சொல்லி உத்திரவிட்ட்து.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’