வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 நவம்பர், 2010

மீள்குடியேறிய மக்களுக்கு விவசாய உதவு தொகை! அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது!

ருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேறிய மக்களுக்கு விவசாயச் செய்கையை மேற்கொள்ளும் பொருட்டு உதவுதொகை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது
. யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பணிப்பாளர் பற்றிக் றஞ்சன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் 20 பயனாளிகளுக்கு 8000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவொரு ஆரம்ப கட்ட நடவடிக்கை என்றும் இப்பணத்தைக் கொண்டு மீளவும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டுமெனவும் பணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்து உரையாற்றும் போது மீள்குடியேறிவரும் மக்களது பல்வேறு கோரிக்கைகளும் தேவைகளும் படிப்படியாக நிறைவு செய்யப்படுமெனவும் அதற்கு அனைவரும் ஒன்றிந்த உழைப்பையும் ஒத்தாசையையும் நல்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் சிறி ரங்கேஸ்வரன் ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சிறீபதி உட்பட பெருமளவிலான பயனாளிகள் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’