இலங்கையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிய குற்றச்சாட்டின் காரணமாக லெபனான் ஜனநாயக இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் மொஹமட் ஹொட்டெய்ட்டையும் அவரின் மனைவியையும் இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இத்தம்பதியினர் இன்றிரவு கட்டார் எயார்வேஸ் மூலம் லெபனானுக்கு அனுப்பப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலநந்தா பெரேரா டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
மொஹமட் ஹொட்டெய்ட்டும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, நாட்டிற்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமிருந்து அறிக்கை கிடைத்தது. இத்தகைய நபர்கள் இங்கு தங்கியிருக்க அனுமதிக்க முடியாது. அதனால் அவர்களை நாடுகடத்தத் தீர்மானித்தேன்' என சூலநந்தா கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’