வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 நவம்பர், 2010

ஜனாதிபதி கண்டி விஜயம்

லங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக இன்று காலை பதவியேற்ற பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி நகருக்கு விஜயம் செய்துள்ளார்.

நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதலாவது விஜயமாக கண்டிக்கு வந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ தலாதா மாளிகைக்குச் சென்று தெய்வ ஆசியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
அதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் உடுகம் ஸ்ரீ புத்தரக்கித தேரர் மற்றும் மல்வத்த பீடாதிபதி திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரின் நல்லாசியையும் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் கண்டி விஜயத்தை முன்னிட்டு கண்டி நகரில் இன்று மாலை முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’