வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 நவம்பர், 2010

ஜனாதிபதியின் பதவியேற்பு: பொலிஸ் மாஅதிபர் மேடையில் காணப்படாதது ஏன்?

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்திற்கான பதவியேற்பு வைபவத்தில் பொலிஸ் மாஅதிபர் வழமைக்கு மாறாக முப்படைத்தளபதிகளுடன் மேடையில் காணப்படாதிருந்தமை இன்று நடந்த வைபவத்தில் கலந்துகொண்டோரின் பேசுபொருளாக காணப்பட்டது.

ஜனாதிபதி தேசிய மட்ட விழாக்களில் கலந்துகொள்ளும்போது, முப்படைத்தளபதிகளுடன் பொலிஸ் மாஅதிபரும் ஜனாதிபதியின் பின் நிற்பது மரபாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் அசோக டி சில்வா முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபோது, முப்படைகளின் தளபதிகள் மட்டுமே மேடையில் காணப்பட்டனர்.
இன்றைய அலங்கார அணிவகுப்பில் பொலிஸ் காணப்படாமை பல ஊகங்களுக்கு இட்டுச் சென்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பில் பொலிஸ் அணியினர் இருக்கவில்லை.
தன்னை இனங்காட்ட விரும்பாத ஒரு அமைச்சர் தனக்கு பொலிஸ் மாஅதிபர் ஏன் ஒதுக்கப்பட்டாரெனத் தெரியவில்லையென்றும் ஜனாதிபதிக்கு பாலசூரிய மீது பூரண நம்பிக்கை உண்டென்றும் தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’