வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

காமன்வெல்த் போட்டிகள் கோலாகல ஆரம்பம்

ந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படும் 19-வது காமன்வெல்த் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி நகரில் கோலாகலமாகத் துவங்கியிருக்கின்றன
.இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படும் 19-வது காமன்வெல்த் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி நகரில் கோலாகலமாகத் துவங்கியிருக்கின்றன.

வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவார உற்சாகத்துக்கிடையே, இங்கிலாந்து ராணியின் சார்பில் இளவரசர் சார்ல்ஸும் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீலும் கூட்டாக போட்டிகளைத் துவக்கி வைத்தார்கள்.
துவக்கத்தில், இந்திய பாரம்பரிய இசைக் கருவிகளைப் பறைசாற்றும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் இசை முழக்கங்களை எழுப்பினார்கள்.
நேரு ஸ்டியேத்தின் மையப்பகுதியில், அலங்கார மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல், 20 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஹீலிங் வாயு கொண்டு நிரப்பப்பட்ட ராட்ச பலூன் தொங்கவிடப்பட்டிருந்தது. அதன் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டிருந்த திரைகளில், அரங்கின் கலை நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றன.
புதுதில்லியில் மிக விமரிசையாக போட்டிகள் ஆரம்பம்
புதுதில்லியில் மிக விமரிசையாக போட்டிகள் ஆரம்பம்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத் தலைவர் மைக் ஃபெனல் மற்றும் பன்னாட்டுத் தூதர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், இங்கிலாந்து ராணியின் பேடன் செய்தியை இளவரசர் சார்ல்ஸ் வாசித்தார்.
'இதுபோன்று அனைத்து நாடுகளும் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது போல், எல்லா நாடுகளும் இணைந்து உலக அமைதிக்குப் பாடுபட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று இளவரசர் சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
அதேபோல், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் பேசும்போது,
இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் இந்த உலகுக்குப் பறைசாற்ற இது சரியான தருணம் என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, இந்தப் போட்டியை நடத்துவது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை தரக்கூடிய தருணம் என்று தெரிவித்தார்.
போட்டிகளைத் துவக்கி வைக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் முன்னதாக, அகர வரிசைப்படி, 71 நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அணிவகுத்து வந்தார்கள். பாகிஸ்தான் அணியினர் வந்தபோது பெரும் கரகோஷத்துடன் ரசிகர்கள் அந்த வீரர்களை வரவேற்றார்கள்.
போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில், இந்திய அணி கடைசியாக வந்தது. கடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்ரா, இந்தியக் கொடியை ஏந்தி, அந்நாட்டு அணிக்குத் தலைமை வகித்து வந்தார். அந்த அணி வந்தபோது, இளவரசர் சார்ல்ஸ், குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்பட அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தது.
இதுவரை காமன்வெல்த் போட்டி வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தப் போட்டியில்தான் அதிகபட்ச வீரர்கள், அதாவது சுமார் 7 ஆயிரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 71 நாடுகளில் இருந்து பங்கேற்கிறார்கள்.
போட்டிகள் 11 நாட்கள் நடைபெறவுள்ளன
போட்டிகள் 11 நாட்கள் நடைபெறவுள்ளன

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நேரத்தில், ஊழல் முறைகேடுகள், அரங்கங்கள் மற்றும் வீரர்களின் குடியிருப்புக்களைத் தயார் செய்வதில் தாமதம், சுகாதாரக் குறைபாடுகள் என இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான எதிர்மறையான செய்திகள், இந்தப் போட்டிகள் தொடர்பாக பல சந்தேகங்களை ஏற்படுத்தின.
பல வெளிநாட்டு அணிகள், தங்கள் அணி இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வது தொடர்பாக சந்தேகங்களைக் கூட வெளியிட்டன. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களாலும், வேறு பல காரணங்களாலும் உசைன் போல்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க இயலாது என அறிவித்துவிட்டார்கள்.
ஆனால், இறுதிக்கட்ட முயற்சியாக இந்திய அதிகாரிகளும் காமன்வெல்த் ஏற்பாட்டாளர்களும் எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றன. வீரர்கள் தங்கும் குடியிருப்புக்கள் தயார் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. அவற்றின் தரம் குறி்த்து, சர்வதேச அணிகளின் நிர்வாகிகளும் வீரர்களும் திருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
தடகளம், குத்துச்சண்டை, வில்வித்தை, நீச்சல் உள்பட 17 வகையான போட்டிகள் இந்த காமன்வெல்த் போட்டிகளில் இடம் பெற உள்ளன. இந்தப் போட்டியில் முதல் முறையாக டென்னிஸ் இடம் பெற உள்ளது. அதேபோல், 1982-ம் ஆண்டுக்குப் பிறகு, வில்வித்தைப் போட்டிகளும் இந்தப் போட்டியில் இடம் பெற உள்ளன.
இந்தப் போட்டியில், இந்திய அணி அதிகபட்சமாக 619 வீரர் மற்றும் வீராங்கனைகளைக் களமிறக்குகிறது. இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள், மல்யுத்த வீரர்கள், பளு தூக்கும் வீரர்கள் இந்தியாவுக்கு அதிக அளவு பதக்கங்களைப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’