வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

யாழில் நெஸ்பிறே சிறுவர் உலகம் நிகழ்வு!

ற்போதைய சூழலில் சிறுவர் உரிமைகளை வென்றெடுப்பதும் எதிர்காலத்தில் அவர்களது அமைதியான மகிழ்ச்சியான வாழ்வுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையின் கீழ் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் உதயன் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (02) நெஸ்லே நிறுவனத்தின் அனுசரணையுடன் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமாகாண பாலர் பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற நெஸ்பிறே சிறுவர் உலகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த கால யுத்தம் காரணமாக சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் தற்போதைய சூழல்நிலை சிறுவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்வினையும் ஏற்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களுக்காகப் பணிபுரிவது எல்லாம் இறைபணிக்கொப்பானதாகவே கருதுகின்றோம்.
சிறுவர்களின் உடல் உள விருத்தியலும் அவர்களது வளமான எதிர்கால அமைதியான மகிழ்ச்சியான வாழ்விலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வரும் நிலையில் அவரது தலைமையின் கீழ் நாமும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.
அதுமட்டுமன்றி பாலர் பாடசாலை ஆசிரியர்களின் நலன்கள் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் அமைச்சரும் எமது கட்சியும் தொடர்ந்து சிரத்தையுடன் பணியாற்றுவோம்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கமைத்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை இதுபோன்ற சிறுவர் நிகழ்ச்சிகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் நெஸ்லே நிறுவனத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலதரப்பினரும் கலந்து கொண்டதுடன் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் சிறுவர்களின் ஊர்வலமொன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’